சேரன், பாண்டி செய்த காரியத்தால் செம கோபத்தில் சோழன்… அய்யனார் துணை சீரியல்

ஒரு பிரச்சனை என்றால் அதை இழு இழு என இழுத்து கதையை நகர்த்துவது தான் சீரியல்களில் வழக்கமாக நடக்கும் விஷயம்.
ஆனால் அப்படி இல்லாமல் பிரச்சனை வந்தால் உடனே முடிப்பது, குடும்பமாக எல்லா விஷயத்தையும் செய்வதும் என வழக்கமான சீரியல் Template இல்லாமல் இந்த அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகிறது.
எபிசோட்
சேரன்-சந்தா திருமண பரபரப்பு முடிந்த உடனே அடுத்த பிரச்சனை துவங்குகிறது. சோழனுக்கு ஒரு காதல் ஜோடியின் சவாரி வருகிறது, அவர்கள் கூறும் கோவிலுக்கு சோழன் காரை ஓட்டிச் செல்கிறார்.
அந்த காதல் ஜோடிகள் கோவிலில் சென்று திருமணம் செய்ய செல்ல மாப்பிள்ளை பெண் வீட்டினர் வந்ததை பார்த்து ஓடி விடுகிறான், சோழன் சிக்கிக்கொள்கிறார்.
அந்த பெண்ணின் சித்தப்பா போலீஸ், சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து அடிக்கிறார்.
அந்த பிரச்சனையில் சேரன், பாண்டி, நிலா அனைவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அந்த இடத்தில் சேரன்-பாண்டி இருவரும் சோழனை நம்பாமல் திட்டுகிறார்கள், வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு இப்படியா என திட்டுகிறார்கள்.
ஆனால் நிலா சோழனை நம்பி என்ன நடந்தது என கேட்டு பிரச்சனையை முடிக்கிறார். தனது அண்ணன்-தம்பி இருவரும் தன்னை நம்பாதது நினைத்து செம கோபத்தில் உள்ளார்.






