ஜீ தமிழ் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க வரும் நடிகை பப்ரி கோஷ்.. எந்த சீரியல் தெரியுமா?

பப்ரி கோஷ்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பப்ரி கோஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதன்பின் சுந்தரி, கௌரி, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். சீரியல்கள் மட்டுமின்றி பைரவா, டூரிங் டாக்கீஸ், விஸ்வாசம், பராசக்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீபம்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பப்ரி கோஷ் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.
அது வேறு எந்த சீரியலும் இல்லை, ‘கார்த்திகை தீபம்’தான். ஆம், நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிகை பப்ரி கோஷ் ’ப்ரியா’ என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.






