கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்… அய்யனார் துணை சீரியல் எபிசோட்

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளின் பாசக் கதையாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இப்போது திருமண கொண்டாட்ட நிகழ்வு நடக்க உள்ளது. சேரன்-சந்தா இருவரின் திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.
ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லை என்று தம்பிகள் புலம்புகிறார்கள். ஆனால் சோழன், பாண்டி எப்படியாவது ஏற்பாடு செய்யலாம் என்கின்றனர்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், அண்ணன்-தம்பிகள் 4 பேரும் இரவு தூங்கும் நேரத்தில் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். பல்லவனை சேரன் மன்னித்தது, சேரன் கல்யாணம் என எல்லா விஷயத்தை பற்றி பேசுகிறார்கள்.
காலையில் சோழன்-நிலா இருவரும் திருமண வேலைகளை கவனிக்க செல்கிறார்கள், முதலில் பத்திரிக்கை விஷயம் கவனிக்கலாம் என்கின்றனர். அப்படியே இருவரும் பேசிக்கொண்டிருக்க சோழன் சுற்றுலா அழைத்துச் சென்ற அம்மா-அப்பா வீட்டிற்கு நிலாவை அழைத்து செல்கிறார்.
சோழன் அவர்களிடம் கடன் கேட்டிருக்கிறார் நிலாவிற்கு அது தெரியாது. அங்கு சென்றதும் சோழனிடம் அவர்கள் பணம் கொடுக்க நிலா செம ஷாக் ஆகிறார், கொஞ்சம் தர்ம சங்கடமாக பீல் செய்கிறார்.
காரில் ஏரிய நிலா எப்போது கேட்டீர்கள், இந்த பணத்தை கண்டிப்பாக திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்கிறார். கடைசியில் பாண்டி-வானதி திருமணம் பற்றி பேசி கொஞ்சம் காதலிக்கவும் செய்கிறார்கள்.






