ராமாயணா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளம்! இந்தியாவிலேயே புது உச்சம்

ராமாயணா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளம்! இந்தியாவிலேயே புது உச்சம்


நிதிஷ் திவாரியின் ராமாயணா படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. ராமன் ஆக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணன் ஆக யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படத்தை 2026 தீபாவளிக்கு திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

இரண்டு பாகங்களாக இந்த படம் வெளிவர இருக்கிறது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் சம்பளம்

ராமாயணா படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பளமாக 30 கோடி ரூபாய் மற்றும் லாபத்தில் பங்கு ஆகியவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இது உண்மை என்றால் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் மாறி உள்ளார். அனிருத் தற்போது அல்லு அர்ஜுன் படத்திற்காக 25 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *