லெஜண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன், தனுஷ் கூறிய முதல் விமர்சனம்

லீடர்
லெஜண்ட் சரவணன் நடிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லீடர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கதாநாயகன் லெஜண்ட் சரவணன் பேசும்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
முதல் விமர்சனம்
“படத்தின் இறுதி எடிட் முடிந்ததும் படத்தை பார்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான். அவர் படம் பார்த்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் துரை செந்தில்குமாருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்”.
“படத்தை பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் சாரும், தனுஷ் சாரும் படம் பிரமாதமாக இருக்கிறது என்றும், பிரம்மாண்டமாக இருக்கிறது என்றும் பாராட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் படத்தை பாராட்டிய பின்னர் ஏற்கனவே எங்களுக்கு இருந்த நம்பிக்கை, எனக்கும் எனது படக்குழுவுக்கும் அதிகமாகி உள்ளது”.
“ஜெயிலர், விக்ரம் மற்றும் லியோ மாதிரியான மிகப்பெரிய வெற்றி படமாக இது அமையும் என நம்பிக்கை உள்ளது. மேலும், அதற்கான தகுதிகள் அனைத்தும் இந்த படத்திற்கு உள்ளது. படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள், படம் உங்களுக்கு 100% சதவீதம் திருப்திப்படுத்தும்” என கூறினார்.






