நடிகை மனிஷா கொய்ராலாவா இது! ஆளே மாறிவிட்டார்… இதோ பாருங்க

மனிஷா கொய்ராலா
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கி பின் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார்.
தமிழில் மணி ரத்னம் இயக்கிய பாம்பே படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார்.
திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அதற்கான விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிஷா கொய்ராலாவா இது!
இந்த நிலையில், நடிகை மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், முதல்வன், பாம்பே படங்களில் பார்த்த மனிஷா கொய்ராலாவா இது என ஆச்சரியப்பட்டு கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்:






