விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில்… வெளிப்படையாக பேசிய நடிகர் சஞ்சீவ்

விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில்… வெளிப்படையாக பேசிய நடிகர் சஞ்சீவ்


விஜய் 

நடிகர் விஜய் தற்போது முழுமையாக சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



மறுபக்கம் விஜய் நடிப்பில் கடைசியாக உருவான ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. தேர்தல் முடிந்தபின்தான் ஜனநாயகன் வெளிவரும் என தற்போது உறுதியாக கூறப்படுகிறது.

விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில்... வெளிப்படையாக பேசிய நடிகர் சஞ்சீவ் | Sanjeev Venkat About Vijay Son Jason Sanjay



விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ். இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பதை நாம் அறிவோம். மேலும், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வெளிப்படையாக பேசிய சஞ்சீவ்



இந்த நிலையில், விஜய்யின் நண்பரும், பிரபல நடிகருமான சஞ்சீவ் பேட்டி ஒன்றில் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.



“விஜய் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் வரும்போது எனக்கு நன்றாக தெரியும் பெரிய ஹீரோவா வருவான் என்று. அதே போல்தான் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் குறும்படங்களை நான் பார்த்து இருக்கிறேன். விஜய் போலவே அவனும் தமிழக மக்கள் கிட்ட பெரிய பெயரை சம்பாதிப்பான் பாருங்க. விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளாக கண்டிப்பாக ஒருநாள் வருவான்” என கூறியுள்ளார்.

விஜய் போல் அவருடைய மகனும் தமிழ்நாட்டில்... வெளிப்படையாக பேசிய நடிகர் சஞ்சீவ் | Sanjeev Venkat About Vijay Son Jason Sanjay



சஞ்சய் தற்போது சிக்மா என்கிற படத்தை இயக்க சந்தீப் கிஷன் அதில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *