இராமாயணம், அனுமனை தொடர்ந்து தமிழில் ஒளிபரப்பாக போகும் பக்தி தொடர்… முழு விவரம்

சன் டிவி
பொழுதுபோக்கு விஷயங்களில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்கள் அதிகம் தொலைக்காட்சி பக்கம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதால் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் விதவிதமான சீரியல்கள், செம கலாட்டாவான கேம் ஷோக்கள் என ஒளிபரப்பு வருகிறார்கள்.
இதற்கு இடையில் நாம் காலம் காலமாக கொண்டாடும் பிரம்மிப்பாக பார்க்கும் இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளும் தொடர்களாக ஒளிபரப்பாகி வருகின்றன.
புதிய தொடர்
கடந்த சில வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் டப்பிங் தொடர் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்று வந்தன.
தற்போது அனுமன் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் ஐயப்பன் அவதரித்த வரலாறு தொடர் விரைவில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாம்.






