தனது வீட்டை மிகப்பெரிய தொகைக்கு விற்ற பிரபுதேவா.. இத்தனை கோடியா?
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. அவர் சமீப காலமாக ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி மற்ற முன்னணி ஹீரோ படங்களில் சின்ன சின்ன ரோல் என்றாலும் நடிக்கிறார்.
பிரபுதேவாவுக்கு சென்னை மட்டுமின்றி மும்பையில் சொந்தமாக பல வீடுகள் இருக்கிறது.
2 வீடு விற்பனை
பிரபுதேவா தற்போது மும்பையில் இருக்கும் தனது இரண்டு அபார்ட்மெண்ட்களை விற்பனை செய்துவிட்டாராம்.
தென் மும்பையில் மஹாலக்ஷ்மி ஏரியாவில் இருக்கும் பிரம்மாண்ட அபார்ட்மெண்டில் 32 மற்றும் 33வது அடுக்குகளில் அந்த வீடுகள் இருக்கின்றன.
2012ல் வாங்கிய அந்த வீடுகளை தற்போது 14.80 கோடி ரூபாய்க்கு பிரபுதேவா விற்பனை செய்து இருக்கிறார். பத்திரப் பதிவும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.






