அய்யனார் துணை சீரியல்: எனக்கு காயத்திரியை பிடிக்கும்.. நிலாவிடம் பல்லவன் கூறிய விஷயம்..

அய்யனார் துணை சீரியல்: எனக்கு காயத்திரியை பிடிக்கும்.. நிலாவிடம் பல்லவன் கூறிய விஷயம்..


நிலாவிடம் பல்லவன் கூறிய விஷயம்

காயத்ரி மற்றும் பல்லவன் லாட்ஜில் சென்று ரூம் எடுத்து பேசி கொண்டிருந்த நேரத்தில் அங்கு போலீஸ் வந்ததால், இருவரும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் சோழன் தனக்கு தெரிந்த MLA மூலம் போலீசிடம் பேசி தனது தம்பியை வெளியே கொண்டு வந்தார்.

வீட்டிற்கு வந்த பல்லவனை அனைவரும் கடுமையாக திட்டி தீர்த்தனர்.

எந்த ஒரு தப்பான எண்ணத்திலும் நாங்கள் அங்கு செல்லவில்லை, பேசத்தான் சென்றோம் என பல்லவன் கூறினாலும் அதை யாரும் நம்பவில்லை. மேலும், பல்லவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். 

அய்யனார் துணை சீரியல்: எனக்கு காயத்திரியை பிடிக்கும்.. நிலாவிடம் பல்லவன் கூறிய விஷயம்.. | Ayyanar Thunai Serial Today Episode

இந்த நிலையில், நிலா பல்லவனிடம் இந்த பிரச்சனை குறித்து பேசுகிறார். பாண்டி எப்படி தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து பேசுகிறாரோ, அதே போல் காயத்திரியை நீ வீட்டிற்கு அழைத்து வந்து பேசலாமே என நிலா கூறுகிறார். அதற்கு பல்லவன், எனக்கு அவளை பிடிக்கும், ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் என கூறுகிறான்.

மேலும், அண்ணன்கள் யாரும் தன்னிடம் பேச மறுக்கிறார்கள், அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என கூற, இப்போதைக்கு உன்னிடம் பேசமாட்டார்கள், அவர்கள் அனைவரும் நீ செய்த செயலால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், கண்டிப்பாக பேசுவார்கள் என கூறி பல்லவனை சமாதானம் செய்கிறார்.

வானதியிடம் பேசிய சோழன்

இதன்பின், பாண்டியனை சந்திக்க மெக்கானிக் கடைக்கு சோழன் செல்கிறார். அந்த சமயத்தில் அங்கு வானதி வர, இவர்கள் இருவரின் பிரச்சனையை பற்றி பேச வானதியை தனது காரில் அழைத்துக்கொண்டு போகிறார் சோழன்.

அய்யனார் துணை சீரியல்: எனக்கு காயத்திரியை பிடிக்கும்.. நிலாவிடம் பல்லவன் கூறிய விஷயம்.. | Ayyanar Thunai Serial Today Episode

பேச ஆரம்பிக்கும் வானதி பாண்டியன் தன்மீது அக்கறையாக இல்லை என்றும், இன்னும் பல விஷயங்களை அடுக்கடுக்காக பேசிக்கொண்டே போக, சோழன் ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விட்டார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *