சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளின் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து!

சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளின் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து!

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜுக்கு பெண் பார்த்துவிட்டேன் என விஜயா கூற, மனோஜுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயத்தை பெண் வீட்டில் சொல்லிவிட்டாயா என அண்ணாமலை கேட்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளின் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! | Sathya Love Rekha In Siragadikka Aasai Serial

ஆனால், அதை இப்போது சொல்ல வேண்டாம், முதலில் பெண் வீட்டார் வந்து மனோஜை பார்க்கட்டும் என விஜயா கூறுகிறார். மேலும் பெண் வீட்டில் இருந்து வரும்போது முத்துவும் மற்றும் ரவியும் இங்கு இருக்க வேண்டாம் என சொல்கிறார்.

காதலை சொல்லப்போகும் சத்யா

இன்றைய எபிசோடில் மனோஜின் இரண்டாம் திருமண கலாட்டா ஒரு பக்கம் இருக்க, சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மறுபுறம் நடைபெற்றது. சத்யாவின் தனது காதலை கூறிய சிந்தாமணியின் மகள், சத்யாவிற்கு புதிய துணிகள் வாங்கி கொண்டு வந்து, மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். வீட்டிலிருந்து அவர் கிளம்பும்போது, இன்று எனக்கு பதில் கூறிவிடு என சொல்ல, முத்துவும் மீனாவும் இதை கேட்டுவிடுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளின் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! | Sathya Love Rekha In Siragadikka Aasai Serial

இதன்பின், சத்யாவிடம் அந்த பெண்ணை காதலிக்கிறாயா என கேட்கின்றனர். அதற்கு, ‘இன்று என் காதலை அவளிடம் சொல்லப்போகிறேன்’ என சத்யா கூறுகிறார். ஆனால், மீனா அந்த பெண் பணக்கார வீட்டை சேர்ந்தவள், இந்த காதல் வேண்டாம் என சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளின் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! | Sathya Love Rekha In Siragadikka Aasai Serial

ஆனால், முத்து சத்யாவுக்கு துணையாக, ‘ உன் காதலை சொல்ல, இந்த முத்து உன்னுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார். சிந்தாமணியின் மகளைத்தான் சத்யா காதலிக்கிறார் என தெரிந்தபின் என்ன நடக்கப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *