இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் முழு லிஸ்ட்! இத்தனை படங்கள் வருகிறதா?

தியேட்டர்களில் என்ன படம் வருகிறது என்பதை தாண்டி, ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக ஒவ்வொரு வாரமும் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களில் லிஸ்ட் பார்க்கலாம்.
மேட் இன் கொரியா
பிரியங்கா மோகன் நடித்து இருக்கும் இந்த படம் வரும் மார்ச் 12ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை, நேரடியாக ஓடிடியில் வருவது குறிப்பிடத்தக்கது.
RESORT வெப் சீரிஸ்
ஹாட்ஸ்டாரில் Resort என்ற வெப் சீரிஸ் மார்ச் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தலைவாசல் விஜய், தர்ஷனா ஸ்ரீபால், விஜய் குமார் ராஜெந்திரன் உள்ளிட்ட பலர் அதில் நடித்துள்ளனர்.
பூக்கி
புதுமுக நடிகர்களை வைத்து பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்து இருந்தார்.
இந்த படம் வரும் மார்ச் 13ம் தேதி Zee 5 தளத்தில் வெளியாகிறது.
Bhartha Mahasayulaku Wignyapthi
ரவி தேஜா நடித்த இந்த படம் மார்ச் 13ம் தேதி zee 5ல் ரிலீஸ் ஆகிறது.
Zootopia 2
குழந்தைகளை அதிகம் கவர்ந்த அனிமேஷன் படம் Zootopia இரண்டாம் பாகம் மார்ச் 11ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளிவருகிறது.
The city is calling… and the adventure just got bigger.
Zootopia 2 premieres March 13 in English, Hindi, Tamil and Telugu on JioHotstar. pic.twitter.com/mOoFE5p0ZK
— JioHotstar (@JioHotstar) March 6, 2026
Aspirants : Season 3
Aspirants மூன்றாம் சீசன் மார்ச் 13ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கில் அந்த தொடர் வர இருக்கிறது.






