நிச்சயதார்த்தம் முடித்த மறுநாளே ஷாக்.. இரண்டு பக்கமும் வந்த சிக்கல்! கயல் மார்ச் 06 அப்டேட்

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது கயல். ஆனந்தியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்பது தான் இப்போது தொடங்கி இருக்கும் புது பிரச்சனை. இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
மீனாட்சி வருத்தத்துடன் கயலின் பெரியப்பாவுக்கு போன் செய்கிறார். அவசரப்பட்டு இந்த நிச்சயதார்த்தம் செய்துவிட்டோமோ என தோன்றுகிறது என மீனாட்சி சொல்ல தர்மலிங்கம் ஷாக் ஆகிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்து மறுநாளே தனது மகன் சின்ன விபத்தில் சிக்கிவிட்டான், அதனால் தான் அப்படி தோன்றுகிறது என சொல்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தாலும் உடனே ஜாதக பொருத்தம் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும் எனவும் கூறுகிறார். பெண் ஜாதகம் வாங்கி கொடுப்பதாக தர்மலிங்கம் கூறுகிறார்.
திருமணமே வேண்டாம்: ஆனந்தி
மறுபுறம் கயல் வீட்டில் எல்லோரும் ஆனந்தி திருமணத்திற்கு சம்மதிக்காதது பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்க சொல்கிறார் அம்மா.
ஆதனால் மூர்த்தி மற்றும் கயல் சென்று ஆனந்தியிடம் பேசுகின்றனர். திருமணம் செய்துகொண்டு நீ படிப்பை தொடரலாம் என கூறுகின்றனர். ஆனால் ஆனந்தி கதறி அழுது தனக்கு இந்த திருமணம் செய்ய விருப்பம் இல்லை என சொல்கிறார்.
அதனால் வேறு வழியின்றி, இனிமேலும் கட்டாயப்படுத்த வேண்டாம் என சொல்லி கயல் சொல்லிவிடுகிறார். இப்படி பல சிக்கல்களுக்கு நடுவில் இந்த திருமணம் நடக்குமா இல்லையா? வரும் நாட்களில் பார்க்கலாம்.






