விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளிவந்த தகவல்

ஜனநாயகன்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் கடைசியாக தனது 69வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ரிலீஸ் நெருக்கத்தில் படத்தின் சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது.
ஜனவரி ரிலீஸ் ஆகும், பிப்ரவரி ரிலீஸ் ஆகும் ரசிகர்களும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் நியூஸ்
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்தை திரையில் கண்டு கொண்டாட ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.
தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால், வருகிற மார்ச் 17ம் தேதிக்குள் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து தணிக்கைச் சான்றிதழை வழங்கும் என்று ஜனநாயகன் படக்குழுவினர் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழகத் தேர்தல் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்ய KVN தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






