மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா குழந்தை விவகாரம்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோ நடுவராக இருப்பவர் மாதப்பட்டி ரங்கராஜ். ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் அவர் மீது ஒரு புகார் அளித்து இருந்தார். திருமணம் செய்து கொண்டு தன்னை கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அது தன்னுடைய குழந்தை தான் என நிரூபித்தால் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறி இருந்தார்.
ஆனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதம்பட்டி வர மறுக்கிறார் என ஜாய் கிரிஸில்டா புகார் கூறினார்.
நீதிமன்றம் அனுமதி
இந்நிலையில் தற்போது டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை மத்யஸ்தரிடம் சமர்ப்பிக்க நீதிமன்றம் கூறி இருக்கிறது.






