விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை

குடும்பம், மூட நம்பிக்கை, பண ஆசை, மகனை வெறுப்பது, உழைப்பு, நேர்மை என பல விஷயங்களை முக்கிய கருவாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். 

இப்போது கதையில் மீனா-முத்துவை வீட்டைவிட்டு அனுப்ப சிந்தாமணி, விஜயாவை வைத்து ஒரு பிளான் போட்டார் அது சக்சஸ் ஆகிவிட்டது. ஒரு ஜோசியரை வீட்டிற்கு அனுப்பி மீனா வீட்டில் இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என சிந்தாமணி சொல்ல வைக்க விஜயா அதையே பிடித்துக் கொண்டார்.

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 3 Episode

அவர் எவ்வளவு சொல்லியும் அண்ணாமலை அதை நம்பவில்லை, மீனாவை அனுப்ப முடியாது என கூறிவிட்டார்.

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 3 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், சீரியல் பார்ப்பவர்கள் எதிர்ப்பார்த்தது போல் தான் நடந்துள்ளது. அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாமலைக்கு தலை மற்றும் காலில் அடிபட்டுள்ளது.

தலையில் ஸ்கேன் எடுத்ததில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். அண்ணாமலை மருத்துவமனையில் இருந்த நேரம் விஜயா வாய்க்கு வந்ததை எல்லாம் மீனாவை பார்த்து திட்டிவிட்டார்.

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 3 Episode

உன் தரித்திரம் தான் உன் அப்பா இறந்துவிட்டார், இப்போது எனது கணவரை ஆடிப்படைக்கிறது என என்னென்னவோ பேசிவிட்டார். விஜயா பேசியதை தாங்க முடியாமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார் மீனா.

மருத்துவமனையில் மீனா இல்லை என்றதும் முத்து ஷாக் ஆகிவிட்டார, பின் அம்மா திட்டியதால் தான் மீனா அவள் வீட்டிற்கு கிளம்பியிருப்பார் என சுதாரித்துக்கொண்டார். 

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 3 Episode

மீனாவும் தனது அம்மா வீட்டிற்கு சென்று இனி நான் அந்த வீட்டிற்கே செல்ல மாட்டேன் என கூறுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *