காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோவில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் காட்டப்படுகிறது.
அந்த சந்தோஷமான விஷயத்தை மயில், சரவணனிடம் கூற அவரோ சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை கேட்கிறார், அதைக்கேட்டதும் மயில் கடும் ஷாக் ஆகிறார்.
நேற்றைய எபிசோடில், மயில் உடம்பு சரியில்லை என கூற மீனாவே அந்த வீட்டிற்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
பின் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் மீனா சந்தோஷப்பட அப்படியே மயில் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை தனது அம்மாவிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், காந்திமதி தனது மகள் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, பேசிக்கொண்டு சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஊருக்கு சென்ற முத்துவேல் தனது வீட்டிற்கு வருகிறார்.
வந்ததும் அம்மா இல்லாத விஷயத்தை அறிந்து ஷாக் ஆகிறார். பின் சக்திவேல் மொத்த விஷயத்தையும் கூற அவர் தனது அம்மாவை மீண்டும் வீட்டிற்கு அழைக்க கோமதி வீட்டின் முன் வருகிறார்.
அவர் தனது அம்மாவை வீட்டிற்கு வர கூற ஆனால் அவரோ நான் இனி வரவில்லை என கூறிவிட்டு கோமதி வீட்டிற்கே சென்றுவிடுகிறார்.






