ஈரான் போர்.. துபாயில் கடும் தாக்குதல்.. அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா?

ஈரான் போர்.. துபாயில் கடும் தாக்குதல்.. அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா?


இஸ்ரேல் – ஈரான்

இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் போர் நடந்து வரும் நிலையில், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து ஈரான் ராணுவம் துபாயில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. துபாயின் புகழ்பெற்ற கட்டிடங்கள் தாக்குதலால் சேதம் அடைந்து பற்றி எரியும் வீடியோக்களும் வெளியாகின. ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

இஸ்ரேல் - ஈரான் போர்.. துபாயில் கடும் தாக்குதல்.. அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா? | Iran Attack On Dubai Does Ajith Is Safe There



துபாயில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுந்தது. அங்குள்ள நடிகைகள் இந்தியாவுக்கு திரும்பவிருந்த நிலையில், தாக்குதல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்தனர்.

பாதுகாப்பாக உள்ளாரா அஜித்



இந்த நிலையில், துபாயில் ரேஸில் கலந்துகொண்டிருக்கும் அஜித், அங்கு பாதுகாப்பாக உள்ளாரா என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர்.. துபாயில் கடும் தாக்குதல்.. அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா? | Iran Attack On Dubai Does Ajith Is Safe There

அஜித் இன்று சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக அவருடைய பயணத்திட்டம் ரத்தானது. மேலும், தற்போது அஜித் பாதுகாப்பாக இருக்கிறார். இந்த பதற்ற சூழல் முடிவடைந்ததும் அஜித் சென்னை திரும்புவார் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளாராம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *