இலங்கையில் சூப்பர் சிங்கர் பிரகதி.. புகைப்படங்கள் இதோ

உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டன. சமீபத்தில் 11வது சீசன் பைனல் நடைபெற்றது. இதில் நிகில் வெற்றிபெற்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார். வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை சென்றுள்ள பிரகதி அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..






