சூர்யா 46 அப்டேட்.. நாளை ரசிகர்களுக்கு வரப் போகும் சூப்பர் ட்ரீட்

லக்கி பாஸ்கர் பட புகழ் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படம் சூர்யா 46. இதன் ஷூட்டிங் முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது.
சூர்யா முன்பே நடித்து முடித்த கருப்பு படம் எப்போது ரிலீஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், சூர்யா 46 பற்றிய முக்கிய அப்டேட் நாளை வருகிறதாம்.
அப்டேட்
நாளை சூர்யா 46 படத்தின் அப்டேட் வர இருக்கிறது என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.






