Fourth Floor திரை விமர்சனம்

Fourth Floor திரை விமர்சனம்


பிக்பாஸ் புகழ் ஆரி, பவித்ரா நடிப்பில் சுந்தர பாண்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள கிரைம் திரில்லர் Fourth Floor படம் எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்


ஆரி மும்பையில் வேலை பார்த்து வர, அவருக்கு தன் எக்ஸ் காதலி அனுவிடம்(பவித்ரா) இருந்து போன் வருகிறது, தான் ஒரு ஆபத்தில் இருப்பதாகவும் நீ வரவேண்டும் என்று. அதே நேரத்தில் சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஹாரர் படம் எடுப்பதற்கு சில யுடியூபர்ஸ் வருகின்றனர்.


அதே அப்பார்ட்மெண்டில் 4வது மாடியில் ஆரி குடி வர, அதன் பின் அங்கு பல அமானுஷிய விஷயங்கள் தெரிகிறது.

Fourth Floor திரை விமர்சனம் | Fourth Floor Movie Review


ஆரிக்கு அந்த அப்பார்ட்மெண்டில் சிலர் நண்பர்கள் ஆகின்றனர், ஒரு நாள் ஒரு கும்பன் அப்பார்ட்மெண்டில் உள்ள சிலரை ஆரி கண்முன்பு கொள்கிறது, ஆரி எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.


ஆனால், பிறகு தான் தெரிகிறது அப்போது ஆரி கண்முன் இறந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே இறந்தவர்கள், என தெரிய வர, அனு மற்றும் ஆரி குழந்தை எங்கே, ஏன் ஆரிக்கு மட்டும் அவர்கள் தெரிந்தார்கள் என்பதே மீதிக்கதை.
 

Fourth Floor திரை விமர்சனம் | Fourth Floor Movie Review

படத்தை பற்றிய அலசல்



ஆரி துடிப்பான இளைஞனாக தனக்கு கொடுத்த ரோல்-யை கச்சிதமாக செய்துள்ளார், காதலியை இழந்த துக்கம், அடிக்கடி வரும் கெட்ட கனவு என அவர் தேடி செல்லும் இடம் என அனைத்து இடத்திலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.


இதை தாண்டி படத்தில் நல்ல கிரைம், திரில்லர் களம் இருந்தும் அதை சுவாரஸ்யமாக எடுக்காமல் போனது தான் பலவீனம். அதிலும் ஆரம்பத்தில் யுடியூபர்ஸ் செய்யும் காட்சிகள், அதை பார்த்து அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் பயப்படுவது என கொஞ்சமும் ஈர்க்காத காட்சிகள்.

Fourth Floor திரை விமர்சனம் | Fourth Floor Movie Review


அதோடு ஆரி தவிற எல்லோருமே மிக செயற்கையாகவே நடித்துள்ளனர், அதுனாலேயே எமோஷ்னல் காட்சிகள் ஒன்ற முடியவில்லை.


டெக்னிக்கலாவும் படத்தில் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட்டை அப்படியே அப்பட்டமாக காட்டுகிறது, தரன் இசை கொஞ்சம் ஆறுதல். 

க்ளாப்ஸ்



ஆரி

தரன் இசை



பல்ப்ஸ்



சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.


மொத்தத்தில் இந்த Fourth Floor படத்தில் வரும் வசனமே பதில்..Fourth Floor பக்கம் போக கூடாது…

Fourth Floor திரை விமர்சனம் | Fourth Floor Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *