லெஜெண்ட் பட நடிகை வெட்டிய கேக் விலை 16 கோடியா? அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

ஹிந்தி, தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. தாராள கிளாமர் ஆக படங்கள் மற்றும் பாடல்களில் தோன்றி ரசிகர்ளை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் ஊர்வசி.
தமிழில் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி ஹீரோயினாக நடித்திருந்தார்.
16 கோடி ரூபாய் கேக்?
சமீபத்தில் தனது 32வது பிறந்தநாளை ஊர்வசி கொண்டாடி இருந்தார். அதில் அவர் வெட்டிய 7 அடுக்கு கொண்ட கேக் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் வைரங்கள் பதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அந்த கேக் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் என செய்தி வெளியாகி இருக்கிறது.
அதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.






