பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி

கில்லி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் ஒரு படம். பல முறை ரீரிலீஸ் ஆனாலும் கோடிக்கணக்கில் வசூலை குவிக்கிறது அந்த படம். விஜய் ரசிகர்கள் அந்த அளவுக்கு கில்லி படத்தை கொண்டாடுகிறார்கள்.
விஜய்க்கு இணையாக வில்லன் முத்துப்பாண்டி ரோலும் பேசப்படும் ஒன்று தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்து இருப்பார்.
நான் தான் நடித்திருக்கணும்
கில்லி படத்தின் முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என வில்லன் நடிகர் வின்சென்ட் அசோகன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
அந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு இயக்குனர் தரணி தன்னை வேறு பல படங்களில் ரெகமென்ட் செய்து வில்லனாக நடிக்கவைத்தார் எனவும் வின்சென்ட் அசோகன் தெரிவித்துள்ளார்.






