சின்ன வயசில் அப்படி இருந்தேன், இப்போ முடியல.. சமந்தா ஓப்பனாக சொன்ன விஷயம்

சின்ன வயசில் அப்படி இருந்தேன், இப்போ முடியல.. சமந்தா ஓப்பனாக சொன்ன விஷயம்


நடிகை சமந்தா உடல்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் அவர் சொந்த தயாரிப்பில் Maa Inti Bangaaram என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படம் மே 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் சமந்தா தனது ரசிகர்கள் உடன் இன்ஸ்டாவில் உரையாடினார். பல கேள்விகளுக்கு அவர் பதில் கொடுத்தார்.

சின்ன வயசில் அப்படி இருந்தேன், இப்போ முடியல.. சமந்தா ஓப்பனாக சொன்ன விஷயம் | Samantha Talks About Reels Addiction

ரீல்ஸ் மோகம்

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துகொண்டே இருப்பதால் அதற்கு அடிமை ஆகிவிடுவது பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அவர், ‘நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போட்டு அதன்படி படிப்பேன். எதிலும் கவனச்சிதறல் ஏற்படாது.’

‘தற்போது அப்படி இருக்க முடியுமா என தெரியவில்லை. ரீல்ஸ் பார்ப்பதால் வரும் Fear Of Missing Out மோசமானது. அதனால் நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்துவிடுவேன். வேண்டுமென்றே போர் ஆன மற்ற விஷயங்களை செய்வேன்’ என சமந்தா கூறியுள்ளார்.

ட்ரோல் செய்தால் பிளாக் தான் செய்வேன்

மேலும் தன்னை பற்றி நெகடிவ் ஆக பேசுபவர்களை நான் உடனே பிளாக் செய்துவிடுவேன் எனவும் கூறி இருக்கிறார். 

GalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *