வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ

வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ


அய்யனார் துணை

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சீரியல் எடுத்துக் கொண்டாலும் பிரச்சனை என்று ஆனால் அதை வைத்தே கதையை இழு இழு என இழுப்பார்கள்.

ஆனால் அப்படி இல்லாமல் ஒரு பிரச்சனை வந்தால் உடனே சில எபிசோடுகளிலேயே முடித்து மக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறார்கள் அய்யனார் துணை சீரியல் குழுவினர்.

கடந்த சில எபிசோடுகளுக்கு முன் அய்யனார் துணை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது பிரச்சனை முடிந்து மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். ரசிகர்களும் அய்யனார் துணை வீட்டிற்கு நடேசன் குடும்பம் சென்றதை கொண்டாடுகிறார்கள்.

வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ | Ayyanar Thunai 19Th To 21St February 2026 Promo

புரொமோ

ஒருவழியாக இன்றைய எபிசோடில் வீட்டுப் பிரச்சனை முடிவடைய அடுத்த பிரச்சனை தொடங்கியுள்ளது. தற்போது வந்துள்ள அய்யனார் துணை புதிய புரொமோவில், வானதி பாண்டி வீட்டில் பொங்கல் கொண்டாடுகிறார்கள், அங்கே செல்கிறேன் என்கிறார்.

அதைப்பார்த்ததும் அவரது அப்பா இவளை அவனுக்கே திருமணம் செய்துவைத்து விடலாம் என்கிறார்.

வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ | Ayyanar Thunai 19Th To 21St February 2026 Promo

இந்த விஷயத்தை வானதி பாண்டியிடம் கூற அவர் இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம் சேரன் அண்ணாவிற்கு திருமணம் நடக்கவில்லை என்கிறார். உடனே வானதி பெண் தான் இருக்காரே திருமணம் செய்ய வேண்டியது தான் என்கிறார்.

எங்கே தங்குவாய் என பாண்டி கேட்க உடனே வானதி, நிலா என்ன நிஜ கல்யாணம் செய்து வந்தாரா, அவரை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள், நாம் அந்த அறையை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

அடுத்தக்கட்டமாக என்ன நடக்குமோ, நிலா வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *