இளையராஜாவுக்கே தடை விதித்த நீதிமன்றம்! பாடல்களை பயன்படுத்த கூடாது..

இளையராஜாவுக்கே தடை விதித்த நீதிமன்றம்! பாடல்களை பயன்படுத்த கூடாது..


இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமை தனக்கே சொந்தம் எனவும், மற்ற படங்களில் அதை பயன்படுத்தினால் அதற்க்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி வருகிறார்.

மஞ்சுமெல் பாய்ஸ் தொடங்கி அஜித்தின் குட் பேட் அக்லீ, Dude படம் வரை பல படங்கள் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து பாடலை நீக்க வைத்தார்.

இளையராஜாவுக்கே தடை விதித்த நீதிமன்றம்! பாடல்களை பயன்படுத்த கூடாது.. | Court Ban Ilaiyaraaja To Use 134 Movie Songs

இளையராஜாவுக்கே தடை

இந்நிலையில் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், அதை இளையராஜா தனது பாடல்கள் என கூறி பாடல் இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது சட்டவிரோதம் என saregama நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த நீதிமன்றம் இளையராஜா அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த கூடாது, வேறு யாருக்கும் அதை பயன்படுத்த உரிமை வழங்க முடியாது என இடைக்கால தடை விதித்தது. 

இளையராஜாவுக்கே தடை விதித்த நீதிமன்றம்! பாடல்களை பயன்படுத்த கூடாது.. | Court Ban Ilaiyaraaja To Use 134 Movie Songs


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *