இது ரீ-ரீரிலீஸ்.. கில்லி மீண்டும் தியேட்டர்களில்! தேதி உடன் வந்த அறிவிப்பு

விஜய்யின் கில்லி படம் 2024ல் ரீரிலீஸ் ஆகி இருந்தது. அப்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் தியேட்டர்களில் கொண்டாடினார்கள். அதனால் மிகப்பெரிய வசூலை ரீரிலீஸில் அந்த படம் குவித்தது.
ரீரிலீஸ் ஆன மற்ற ஹீரோக்களின் படங்கள் தொட முடியாத அளவுக்கு மிகப்பெரிய தொகையை ரீரிலீஸில் குவித்து இருந்தது கில்லி.
ரீ-ரீரிலீஸ்
இந்நிலையில் தற்போது மீண்டும் கில்லி படம் தியேட்டர்களில் வரும் பிப்ரவரி 20ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.






