'ஆம் நான் அந்த படத்தில் நடித்துள்ளேன்'.. சூர்யாவுடன் கைகோர்க்கும் இளம் நடிகை.. சூர்யா 46 அப்டேட்

'ஆம் நான் அந்த படத்தில் நடித்துள்ளேன்'.. சூர்யாவுடன் கைகோர்க்கும் இளம் நடிகை.. சூர்யா 46 அப்டேட்


சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் பிரம்மாண்ட படம் கருப்பு. இப்படம் தேர்தல் முடிந்தபின் வெளிவரும் படம் அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூர்யா 46

இதை தொடர்ந்து சூர்யா 46 படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பவானிஸ்ரீ 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கையும் பிரபல நடிகையுமான பவானிஸ்ரீ இப்படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். இவர் அளித்த பேட்டியில், “ஆம் நான் சூர்யா 46 படத்தில் நடிக்கிறேன், ஆனால் இதை தவிர வேறு எதையும் என்னால் இப்போது சொல்ல முடியாது” என கூறியுள்ளார்.

நடிகை பவானிஸ்ரீ கா.பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின் பாவக்கதைகள், விடுதலை, நண்பன் ஒருவன் வந்த பிறகு, ஹாட் ஸ்பாட் 2 மச் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *