விஜய் டிவியில் புதிய சீரியல்.. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

புதிய சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் விஜய் டிவியில் கனா கண்டேனடி மற்றும் அழகே அழகு ஆகிய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகின. இந்த வரிசையில் தற்போது புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்
இந்த புதிய சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். அது என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் அஜித் இந்த புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே ஜியா ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






