சீதா பயணம் திரை விமர்சனம்

சீதா பயணம் திரை விமர்சனம்


சீதா பயணம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள சீதா பயணம் ஆக்‌ஷன் கிங்கிற்கும் அவர் மகளுக்கும் வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

சீதா பயணம் திரை விமர்சனம் | Seetha Payanam Movie Review


கதைக்களம்



சீதா(ஐஷ்வர்யா அர்ஜுன்) அம்மாவை சிறு வயதிலெயே இழந்து தன் அப்பா சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக வளர்ந்து பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு நாள் சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு செல்கிறார்.


அப்படி செல்லும் வகையில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார், அவர் தன் ஊருக்கு போக லிப்ட் கேட்க, சீதாவும் லிப்ட் கொடுத்து அவருடன் பயணிக்கிறார்.

அப்படி செல்லும் வகையில் டீக்கடை, ஸ்கூல் குழந்தைகள், ரோட்டில் பழம் விற்பவர் என அனைவரையும் சந்தித்து நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.

சீதா பயணம் திரை விமர்சனம் | Seetha Payanam Movie Review



அப்படி அவர் ஒர்க் ஷாப் பில்டிங்கில் அருகில் வரும் போது கேஸ் லீக்கெஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, ஐஸ்வர்யா அர்ஜுன் நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.


இதனால் ஒரு முடிவுக்கு ஐஸ்வர்யா வருகிறார், அது என்னவென்றால் தான் 20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என சீதா பயணத்தை தொடங்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

சீதா பயணம் திரை விமர்சனம் | Seetha Payanam Movie Review


படத்தை பற்றிய அலசல்



படத்தின் கதைக்களம் நன்றாலவே உள்ளது, அதோடு புதுமையாகவும் உள்ளது, ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார், நடனமெல்லாம் சூப்பர்.

இவரை தாண்டி படத்தில் பிரகாஷ் ராஜ், சத்யராஜ் எல்லாம் கொடுத்த கதபாத்திரத்திற்கு குறையில்லை ரகம், ஹீரோவாக வரும் நிரஞ்சன் அநியாய அந்நிய வாடை, அவரின் ஆக்டிங் கொஞ்சம் ஒட்டாமலே செல்கிறது.

சீதா பயணம் திரை விமர்சனம் | Seetha Payanam Movie Review



அதற்கு முக்கிய காரணம் இந்த படம் தமிழா, தெலுங்கா என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது, பல காட்சிகளில் லிப் சிங்-கே இல்லை, தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்கள் போல, அதுனாலேயே நாயகர்கள் நடிப்பு எதோ டப்பிங் படம் பார்ப்பது போலவே உள்ளது.


சீதா முதல் பாதி முழுவதும் மதுரை ஒர்க் ஷாப் செல்லும் பயணமாகவே இருந்தது, அந்த பயணம் ஆவரேஜ் ஆக செல்ல, நன்றி சொல்ல சீதா போகும் பயணம் கோவை சரளா சந்திப்பு, அர்ஜுன் கேமியோ என ஒரு சில இடங்களே ரசிக்க வைக்கிறது.


நிரஞ்சன் வீட்டுக்கு ஐஸ்வர்யா சென்று அந்த ஊர் விளையாட்டு போட்டிகளை பார்ப்பது, சமைத்து கொடுப்பது போன்ற காட்சிகள் ஓகெ என்றாலுன் இதெல்லாம் 90ஸ் காலத்தோடு ரசிக்கப்பட்ட காட்சி, இன்றைய இளைஞர்களுக்கு கிரின்ச்-ஆகவே செல்கிறது.


டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், அத்தனை கலர்புல் ஆக இருக்கிறது, இசை பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை, பின்னணி இசை நன்றாகவே இருந்தது.

சீதா பயணம் திரை விமர்சனம் | Seetha Payanam Movie Review


க்ளாப்ஸ்



கதைக்களம்

நன்றி சொல்ல போகும் போதும் வரும் ஒரு சில காட்சிகள்.


பல்ப்ஸ்



பார்த்து பழகி போன 90ஸ் சினிமா காட்சிகள்.


மொத்தத்தில் சீதா பயணம் இந்த ப்ரேமலு ஜெனரேஷனில் ஈடுகொடுக்க முடியாத கொஞ்சம் டல் பயணமாகவே செல்கிறது.


2/5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *