Crime 101 திரை விமர்சனம்

Crime 101 திரை விமர்சனம்


Crime 101 

ஹாலிவுட் திரையுலகில் ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்கு பஞ்சமே இருக்காது.

அப்படி நிரம்பி வழியும் ஆக்‌ஷன் படங்களுக்கு நடுவே பார்ட் லேய்டன் இயக்கத்தில் கிரிஸ் ஹெம்ஸ்வெர்த், மார்க் ரஃபலோ, ஹலே பெர்ரி நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்‌ஷன் க்ரைம் திரில்லரான க்ரைம் 101 எப்படி? பார்ப்போம்.

Crime 101 திரை விமர்சனம் | Crime 101 Movie Review

கதைக்களம்



நாயகன் கிரிஸ் ஹெம்ஸ்வெர்த் படத்தின் ஆரம்பத்திலேயே ஹாக்கர் ஒருவர் உதவியுடன் கைமாறும் டைமண்ட் ஒன்றை கொள்ளையடித்து அதை ஒருத்தரிடம் கை மாற்றுகிறார், அதோடு இனி இந்த வேலை எனக்கு வேண்டாம் என நகர்கிறார்.


அதே நேரத்தில் இந்த கேஸை மார்க் ரஃபலோ டிடெக்டிவ்-ஆக இருந்து கண்டுப்பிடிக்க வருகிறார். இந்த வேலை வேண்டாம் என்று ஒதுங்கிய கிரிஸ் மீண்டும் எதோ ஒன்றை செய்கிறார் அதுவும் தனக்கு தெரியாமல் என்பதை உணர்ந்த பாஸ் அவரை பின் தொடர ஸ்பை ஒன்றை வைக்கிறார்.


இந்த முறை கிரிஸ், மிகப்பெரிய இன்ஸுரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலைபார்க்கும் ஹாலே பெர்ரி அக்கவுண்ட்-யை ஹாக் செய்து அவருடைய பிஸினஸ் க்ளையிண்ட்ஸை தெரிந்துக்கொள்கிறார்.

இப்படி ஒரு பெரிய திட்டத்தை கிரிஸ் போட, அவருடைய பாஸ் கிரிஸ் திட்டத்தை என்ன செய்தார், அதே நேரத்தில் போலிஸ் இவரை பிடித்ததா அல்லது அந்த திட்டத்தை கிரிஸ் நினைத்தபடி நிறைவேற்றினாரா என்ற பரபரப்பான களமே இந்த Crime 101 மீதிக்கதை.

Crime 101 திரை விமர்சனம் | Crime 101 Movie Review


படத்தை பற்றிய அலசல்


கிரிஸ் ஹெம்ஸ்வெர்த் 6 அடி காத்தே என்பது போல் படம் முழுவதும் வெறப்பாகவே வந்து செல்கிறார். ஒரு இடத்தில் கூட தப்பி தவறி கூட சிரிக்காமல் தனக்கு என்ன வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே செல்கிறார்.


கொள்ளையடிப்பது கான்செப்ட் என்றால் படம் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது சீட்டின் நுனியில் உட்கார வேண்டும், எதற்காக இந்த கொள்ளை என்பதே.

ஆனால், இந்த படத்தில் இது இரண்டுமே இல்லை, படம் ஆரம்பிக்கும் போது பரபரப்பாக சில டைம்ட்ஸை கொள்ளையடிக்கின்றனர், பிறகு ஒரு பைக் சேஸ் அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் தான் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது படம்.

Crime 101 திரை விமர்சனம் | Crime 101 Movie Review


இதற்கிடையில் ப்ளான் செய்வது ஆஹா ஓஹோ இருக்கும் என பார்த்தால் அதுவும் இல்லை, படம் கான்வெர்சேஷனாகவே முழுவதும் நகர்கிறது, ஆனாலும் போர் அடிக்கவில்லை.

படத்தின் ஹீரோ கிரிஸ் ஹெம்ஸ்வெர்த் என நினைத்தால், கிளைமேக்ஸ் அரை மணி நேரம் பெர்ப்பாமன்ஸில் மார்க் ரஃபலோ அனைத்தையும் தட்டி தூக்கி விடுகிறார்.

ஸ்பை-ஆக வரும் சின்ன பையன் கதாபாத்திரம் தன் அசால்ட் ஆன நடிப்பால் மிரட்டுகிறார்.

ஹாலே பெர்ரி படம் முழுவதும் அழுதுக்கொண்டே தான் இருக்கிறார், அவருக்கான மொமண்ட் என்று படத்தில் எதுவுமில்லை, இப்படியான ஹெஸிட் படத்தில் காரண காரியங்கள் வலுவாக இருக்க வேண்டும்.


ஆனால், ஹீரோ எதற்காக கொள்ளையடிக்கிறார், அதுவும் ஒரு வகை குற்ற உணர்ச்சியுடனே இருக்கிறார், அதுவும் ஏன் என புரியாதது ரசிகர்களுக்கு பெரிய இம்பாக்ட் எதுவும் ஏற்படுத்தவில்லை.


ஆனால், இந்த படம் மூலம் அமெரிக்கா என்றாலே பணக்கார நாடு என்ற மித்-யை உடைத்தது சூப்பர், அங்கும் தங்க வீடு இல்லாமல் ரோட்டில் வாழும் மக்களை ஒரு சில ஷாட்-ல் காட்டுவது எல்லா நாடும் ஒன்று தான் என நினைக்க வைக்கிறது.

டெக்னிக்கல் ஒர்க் இசை, ஒளிப்பதிவு பிரமாதம்.



க்ளாப்ஸ்



நடிகர், நடிகைகள் பங்களிப்பு

டெக்னிக்கல் ஒர்க்

கிளைமேக்ஸ்


பல்ப்ஸ்



காரணமே தெரியாமல் திருட்டு வேலைகள் நடப்பது கதையிலும் சரி நமக்கும் சரி பெரிய இம்பாக்ட் உருவாக்கவில்லை.


மொத்ததில் அதிரடி ஆக்‌ஷன் என நினைக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே, அனைத்து ஹாலிவுட் படமும் நான் பார்ப்பேன் என்பவர்களுக்கு ஒன் டைம் வாட்ச்
.

2.75/5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *