பூக்கி திரை விமர்சனம்

பூக்கி திரை விமர்சனம்


விஜய் ஆண்டனி இசையில் அஜய், தனுஷா, பாண்டியராஜன் நடிப்பில் கணேஷ் சந்திரா இயக்கத்தில் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த பூக்கி, இளைஞர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review

கதைக்களம்



அஜய் , தனுஷா இருவரும் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு காரில் சண்டை போட்டு வருகின்றனர். இருவருமே சில வருடம் காதலித்து திருமணத்திற்குள் செல்லலாம் என நினைக்கும் போது இந்த சண்டை வருகிறது.


இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர்.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review

அஜய், தனுஷா இருவருமே ப்ரேக் அப்-ல் இருந்து வெளிவர வேண்டும் என சப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல வேலைகளை செய்கின்றனர்.


ஆனால், எதோ ஒரு வகையில் இருவருக்கும் சில நியாபகம் வர, ஒரு கட்டத்தில் இது எதுவுமே வேண்டாம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்ய பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review

படத்தை பற்றிய அலசல்


பூக்கி என்ற டைட்டிலே கேட்சியாக இருக்க, இந்த தலைமுறைக்கு முக்கியமாக ஜென் சி ரசிகர்களை டார்கெட் செய்யும் வேண்டும் என்றே இயக்குனர் இறங்கி அடித்துள்ளார், படம் முழுவதும் எதோ இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்து போலவே உள்ளது.

படத்தில் வரும் முக்கால்வாசி பேர்கள் இன்ஸ்டா ரீல்ஸில் வருபவர்களே.

படத்தின் நாயகன் அஜய் ப்ரேக் அப் ஆன பிறகு அவர் காதலியை மறக்க செய்யும் விஷயங்கள் புது காதல் அதில் பல்ப் வாங்குவது என இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கிறார்.

அதே நேரத்தில் ஒரே ரியாக்ஸனில் பல இடங்களில் இருந்து நடிப்பில் கொஞ்சம் தடுமாறினாலும் காட்சிகள் அவரை காப்பாற்றுகிறது. ஆனால், தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு தான் அஜய்.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review



அதே நேரத்தில் அறிமுக நடிகை தனுஷா தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், சாப்பாடு, ஷாப்பிங் என அவர் ப்ரேக் அப்-யை மறகடிக்க செய்யும் வேலைகள் அதோடு ஆன்மிக குருவாக வரும் சுனில்-வுடன் வரும் காட்சிகள் என அனைத்திலும் கலக்கியுள்ளார்.



படம் முழுவதுமே இவர்கள் 2 பேரை சுற்றியே நடக்கிறது, அதை முடிந்தளவிற்கு போர் அடிக்காமல் கொண்டு போக, இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ், சிம்பு டயலாக், மிருகங்கள் பேசுவது என ஆங்காங்கே சொருகி என்கேஜ் செய்ய முயற்சித்துள்ளார். 

அதே நேரத்தில் இது எல்லோருக்கும் எந்த அளவிற்கு கனேக்ட் ஆகும் என்று சொல்ல முடியாது, ஆனால், இந்த ஜென் சி ரசிகர்கள் ரசிக்கும் படி பல காட்சிகள் வைத்துள்ளனர். அதிலும் ஹீரோ அஜய் மேட்ரிமோனி-ல் பெண் தேடும் போது பெண்கள் எதிர்பார்க்கும் காதல் என்று ஒன்றை காட்டுகின்றனர், அதெல்லாம் சிரிப்பு சரவெடி தான்.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review

அதே போல் ஹீரோயின் தனுஷாவும் தனக்கான மேட்ச் பார்க்கும் போது சந்திக்கும் நபர்கள் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம், அதை காட்சி படுத்தியது எல்லாம் இன்றைய ட்ரெண்ட் எடிட்டிங் சூப்பர்.


ஆனால், இது அனைத்துமே எந்த ஒரு பெரிய எமோஷ்னல் கனேக்ட் இல்லாமல் அப்படியே என்கேஜ் செய்ய வேண்டும் என்றே செல்வது ஓகே என்றாலும் இதையே திருப்பி திருப்பி பார்ப்பது கொஞ்சம் டயர்ட் தான்.

பாடல்கள் விஜய் ஆண்டனி வைப் என்றாலும் அதுகாக இன்னும் புரியாததையே பாடுவது என்னயா இது என்றே உள்ளது, ஒளிப்பதிவு, எடிட்டிங் சூப்பர்.

க்ளாப்ஸ்


இன்றைய ட்ரெண்ட் காதலர்களை காட்டிய விதம்


ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்.


வசனங்கள்


பல்ப்ஸ்


ஏதோ 30 செகண்ட் இன்ஸ்டா ரீல்ஸை 2 மணி நேரம் பார்த்த உணர்வு.


பெரிய அழுத்தமில்லாத காட்சிகள்.


மொத்தத்தில் காதல், மோதல், வலி, சமூக பொறுப்பு என எதுவும் சீரியஸாக பார்க்காமல் பொழுதுப்போக்கிற்காக இந்த பூக்கியை பார்க்கலாம்.

பூக்கி திரை விமர்சனம் | Pookie Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *