சூப்பர் சிங்கர் புகழ் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது… ஜோடியின் போட்டோ இதோ

சூப்பர் சிங்கர் புகழ் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது… ஜோடியின் போட்டோ இதோ


சூப்பர் சிங்கர்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ஹிட் ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் தான். கடந்த 2006ம் ஆண்டு முதன்முறையாக இந்த ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியது.

அந்த வருடம் முதல் தொடர்ந்து சீனியர், ஜுனியர் என மாறி மாறி பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியாக சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீசனில் புதிய கான்செப்ட், புதிய நடுவர்கள் என கொஞ்சம் மாறியிருந்தது.

கடந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய சூப்பர் சிங்கர் 11வது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த 11வது சீசனின் வெற்றியாளராக நிகில் டைட்டிலை ஜெயித்தார்.

அருணா

சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டு அந்த சீசனின் டைட்டிலையும் வென்றவர் தான் அருணா.

ஹாரிஷ் ஜெயராஜ் தான் அந்த சீசனின் வெற்றியாளரை அறிவித்தார். அருணாவிற்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடும், ரூ. 10 லட்சம் பணமும் பரிசாக கொடுக்கப்பட்டது.

தற்போது சூப்பர் சிங்கர் புகழ் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதோடு நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *