மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்…

மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்…


பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன்.

இதன்பின் டிராகன், Dude என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இன்று தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

தயாரிப்பாளர்

இந்த நிலையில், இயக்குநர், ஹீரோவை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் துணை இயக்குநர் இயக்கவுள்ளாராம். சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இதற்கு முன் Dude படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *