இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து இயக்குனர் வெளியேறிவிட்டாரா? உண்மை இதுதான்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவே இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
அந்த படத்தில் இருந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டார் என சமீபத்தில் செய்தி பரவி வந்தது.
மறுப்பு
இந்நிலையில் இந்த படம் டிராப் ஆகவில்லை, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகவில்லை என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்து இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன் அதை முடித்தபிறகு இளையராஜா பயோபிக் படத்தை தொடங்க இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.






