செம ஹிட்டடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் OTT ரிலீஸ் தேதி… வெளிவந்த தகவல்

செம ஹிட்டடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் OTT ரிலீஸ் தேதி… வெளிவந்த தகவல்


தலைவர் தம்பி தலைமையில்

2026வது வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி தமிழில் வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில்.

நடிகர் ஜீவாவின் 45வது படம் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகி இருந்தது.

ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவாவை தாண்டி தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

செம ஹிட்டடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் OTT ரிலீஸ் தேதி... வெளிவந்த தகவல் | Thalaivar Thambi Thalaimaiyil Ott Release Date

பொங்கலையொட்டி வெளியான பராசக்தி, வா வாத்தியார் படங்களை பின்னுக்குத் தள்ளி ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் மாஸ் வெற்றியடைந்த அரசியல் கலந்த நகைச்சுவை படமான தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தலைவர் தம்பி தலைமையில் படம் வருகிற பிப்ரவரி 12ம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *