பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான்.. 11வது படிக்கும்போது நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை ரேவதி

பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான்.. 11வது படிக்கும்போது நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை ரேவதி


ரேவதி

1983ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த மண் வாசனை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அப்படம் நல்ல படமாக இருக்கும் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான்.. 11வது படிக்கும்போது நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை ரேவதி | Revathy Talk About Bad Personal Experience In Bus



நடிகையாக மட்டுமின்றி இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு The Good Wife எனும் வெப் தொடர் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரேவதி என்பதும் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நபர் ஆவார். அதே போல் தைரியமான, அழுத்தமான கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

வெளிப்படையாக பேசிய நடிகை 

இந்த நிலையில், 11வது வகுப்பு படிக்கும்போது பேருந்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் 11வது படித்துக்கொண்டு இருக்கும் போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளாரென கன்னத்தில் அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக நின்றார்கள்.

பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான்.. 11வது படிக்கும்போது நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை ரேவதி | Revathy Talk About Bad Personal Experience In Bus

அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா. யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்றார். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதைபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *