370க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல தென்னிந்திய நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

370க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல தென்னிந்திய நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

ரகுநாத ரெட்டி

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரகுநாத ரெட்டி. இவர் 370க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

370க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல தென்னிந்திய நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Actor Raghunatha Reddy Died At Age 72

ஆந்திரா விஜயவாடாவை சேர்ந்த இவர், 1991ஆம் ஆண்டு சர்ப்ப யாகம் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், போஜ்பூரி என பல மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் வெளியான, உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, ஒரு வீடு ஒரு வாசல், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம்

கடந்த சில மாதங்களுக்கு முன் இவருடைய மகன் உயிரிழந்த நிலையில், இவரும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி நடிகர் ரகுநாத ரெட்டி மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 72. இவருடைய மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

370க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல தென்னிந்திய நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Actor Raghunatha Reddy Died At Age 72

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *