சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா… அய்யனார் துணை சூப்பர் புரொமோ

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா… அய்யனார் துணை சூப்பர் புரொமோ

அய்யனார் துணை

எல்லா சீரியல்களும் ஒரே மாதிரியான கதைக்களம் கொண்டது தான் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு உள்ளது. இதனாலேயே சீரியல் இயக்குனர்கள் தங்களது சீரியல்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என நிறைய போராடுகிறார்கள்.

அப்படி இப்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் வித்தியாசமாக உள்ளது என ரசிகர்கள் கூறும் ஒரு சீரியல் தான் அய்யனார் துணை. 

விஜய் டிவியில் இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா... அய்யனார் துணை சூப்பர் புரொமோ | Ayyanar Thunai 2Nd To 7Th February 2026 Promo

புரொமோ

4 அண்ணன்-தம்பிகளின் அழகான வாழ்க்கை கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியாக கதையில் சோழனிடம் ராகவ் நிலா என் ஆளு என கூறியதால் அவர் மிகவும் அட்செட்டில் இருந்தார், தனது அப்பாவிடம் புலம்பி தள்ளினார்.

இன்னொரு பக்கம் பெங்களூரு செல்ல இருந்த பாண்டியுடன் நானும் வருவேன் என அடம்பிடித்து வானதியும் அவருடன் செல்ல இப்போது இரவு அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் பாண்டி நான் வேண்டாம் என்றேன் இப்போது பார் என்ன ஆனது என சண்டை போடுகிறார்.

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா... அய்யனார் துணை சூப்பர் புரொமோ | Ayyanar Thunai 2Nd To 7Th February 2026 Promo

இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் நிலா சோழனிடம் என்ன ஆனது, அன்று இரவு என்னை ரெஸ்டாரன்டில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்கிறார்.

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா... அய்யனார் துணை சூப்பர் புரொமோ | Ayyanar Thunai 2Nd To 7Th February 2026 Promo

உடனே சோழன் ராகவ் சொன்னதையும் ஸ்டேடஸ் விஷயத்தையும் காட்ட நிலா ஆபிஸ் செல்கிறார். அங்கு ராகவிடம் என் ஆளு என கூறியுள்ளீர்கள், வாட்ஸ் அப் ஸ்டேடஸில் முத்த ஸ்டைலி எல்லாம் போட்டுள்ளீர்கள், இதனால் சோழனுக்கும் எனக்கும் சண்டை என கூறுகிறார்.

ராகவ் அதனால் அவருக்கு என்ன பிரச்சனை என கேட்க, நிலா அவர் எனது கணவர் என கெத்தாக கூறுகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *