விஜய்யால் அது தான் ஒரே பாதிப்பு.. குஷ்பு சொன்ன விஷயம்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் அவரை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக விஜய்யை தாக்கி தான் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பேசி வருகின்றனர். இந்நிலையில் விஜய் பற்றி பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு ஒரு விஷயம் பேசி இருக்கிறார்.
விஜய் தம்பி மாதிரி
விஜய்யை நான் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. அவரால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவரை நான் தம்பியாக தான் பார்க்கிறேன். அவர் சினிமாவில் இருந்து விலகுவது மட்டும் தான் ஒரே பாதிப்பு.
அவர் எங்கே இருந்தாலும் என் வாழ்த்துக்கள் என குஷ்பு பேசி இருக்கிறார்.






