‘டாக்ஸிக்’ படம் : யாஷ், நயன்தாரா, கியாரா – யாருக்கு எவ்வளவு சம்பளம்?

‘டாக்ஸிக்’ படம் : யாஷ், நயன்தாரா, கியாரா – யாருக்கு எவ்வளவு சம்பளம்?


மும்பை,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டாக்ஸிக். இந்த படத்தினை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.

கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி உள்ள இந்த படம் வருகிற மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தில் நடித்து வரும் நயன்தாரா மற்றும் சக நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்த படத்தில் ‘யாஷ்’ ரூ.50 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கங்கா கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவுக்கு ரூ.18 கோடியும், நதியா கேரக்டரில் நடித்து வரும் கியாரா அத்வானிக்கு ரூ.5 கோடியும், மெலிசா கேரக்டரில் நடித்துள்ள ருக்மினி வசந்த் ரூ.5 கோடி, தாரா சுதாரியா ரூ.3 கோடி, ஹுமாகுரேசிக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *