Draupathi2 Making Video out | “திரௌபதி 2” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

Draupathi2 Making Video out | “திரௌபதி 2” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது


சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23 ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘திரௌபதி 2’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 23 ம் தேதி வெளியாகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *