பராசத்தி படத்தில் சிவகார்த்திகேயன் தம்பியாக நடிக்க அதர்வா வாங்கிய சம்பளம்.. விவரம் இதோ

பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் பராசக்தி.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ரவி மோகன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் ஸ்ரீலீலா கதாநாயகியாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் அதர்வா. இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சம்பளம்
இந்த நிலையில், பராசக்தி படத்தில் நடிப்பதற்காக நடிகர் அதர்வா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் அதர்வா ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.






