“திரைக்கு நடிகை ரம்யா ரீ-என்ட்ரி”- ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய அறிவிப்பு!

“திரைக்கு நடிகை ரம்யா ரீ-என்ட்ரி”- ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய அறிவிப்பு!


பெங்களூரு,

கன்னட திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா. இவர் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

நேற்று அவர் பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கப்போவது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகை ரம்யா, பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபுவின் இயக்கத்தில் ஒரு சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதுபற்றிய தகவலை அவர் தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை ரம்யா கடந்த 2021-ம் ஆண்டில் ‘நாகரஹாவு’ என்ற படத்திலும், 2023-ம் ஆண்டு ‘ஹாஸ்டல் உடுகரு’ என்ற படத்திலும் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *