ஓடிடிக்கு வரும் ஜான்வி கபூரின் ‘காதல்’ படம்…எப்போது, எதில் பார்க்கலாம்?

ஓடிடிக்கு வரும் ஜான்வி கபூரின் ‘காதல்’ படம்…எப்போது, எதில் பார்க்கலாம்?


சென்னை,

வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் நகைச்சுவை படம் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. பத்ரிநாத் கி துல்ஹானியா மற்றும் தடக் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற ஷஷாங்க் கைதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, வசூல் ரீதியாகவும், இந்தப் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக தயாராக இருப்பதுபோல் தெரிகிறது. அதன்படி, சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி வருகிற 27-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரோஹித் சரப் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் மணீஷ் பால், அக்‌ஷய் ஓபராய் மற்றும் அபினவ் சர்மா ஆகியோர் துணை வேடங்கலும் நடித்துள்ளனர். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் மென்டர் டிசைபிள் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் கரண் ஜோஹர் மற்றும் ஷஷாங்க் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *