உடல்நிலை மோசம்; நடிகர் தர்மேந்திராவுக்கு தீவிர சிகிச்சை

உடல்நிலை மோசம்; நடிகர் தர்மேந்திராவுக்கு தீவிர சிகிச்சை


மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சையில் உள்ளார்.

இந்தநிலையில் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த தகவலை நடிகரின் மகனான சன்னி தியோலின் பிரதிநிதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்த அடுத்தகட்ட தகவல் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளப்படும். அவர் விரைவாக குணமடைய அனைவரின் பிரார்த்தனைகளும் வேண்டும். மேலும் அவருடைய குடும்பத்தின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், மனைவி ஹேமமாலினி, மகள் இசா தியோல் ஆகியோர் அவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *