டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் டிரெய்லர் வெளியீடு


சென்னை,

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ‘ஐபிஎல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்திலிருந்து ‘அப்போ இப்போ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘ஐபிஎல்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *