ராஷ்மிகா மந்தனாவின் “தாமா” படத்தின் வசூல் அப்டேட்

ராஷ்மிகா மந்தனாவின் “தாமா” படத்தின் வசூல் அப்டேட்


கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, ‘ஷைத்தான்’, ‘முஞ்யா’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த ‘தாமா’ படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். நவாஸுதீன் சித்திக், சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேடாக் ஹாரர்-காமெடி யுனிவர்ஸில் இருந்து வெளிவந்த ஐந்தாவது படம் தாமா. இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தது.

இந்நிலையில், ‘தாமா’ படம் 14 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *