“வேடுவன்” வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

கைதி, லவ்வர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கண்ணா ரவி. முழு கமர்சியல் கதைகளைத் தாண்டி ரத்தசாட்சி போன்ற சமூக ரீதியான கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் கூலி திரைப்படத்தில் நாகர்ஜூனாவின் மகனாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது, கண்ணா ரவி நடிப்பில் வேடுவன் வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் பவன் இயக்க, ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஜீ 5 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சஞ்சீவ் வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் அக்டோபர் 10ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
இந்நிலையில், ‘வேடுவன்’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வேடுவன் கதையில் சூரஜ் (கண்ணா ரவி) நடிகராக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவருக்கு “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கேரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவை உலகத்திற்கு தெரியவருகிறது. சினிமா கதையுடன் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.