இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்


இயக்குநர் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் ஜெண்டில் மேன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், இந்தியன், எந்திரன், நண்பன் என பல சூப்பர்ஹிட் படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Nadigar Thilagam Sivaji In Shankar Marriage

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு திரைப்படங்களும் கடுமையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்தது. ஆனாலும் இந்தியன் 3 படத்தில் மாஸ் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



இந்தியன் 3 படத்தை தொடர்ந்து வேள்பாரி நாவலை மையமாக வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் திருமணத்தில் சிவாஜி



ஈஸ்வரி என்பவரை இயக்குநர் ஷங்கர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜித் ஷங்கர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் அதிதி ஷங்கர் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். விரைவில் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Nadigar Thilagam Sivaji In Shankar Marriage

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் – ஈஸ்வரி திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *